வயிற்றுப் புற்றுநோய் உருவாவதற்கான காரணங்கள் யாவை?
நோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எவ்வொரு விஷயமும் ஆபத்துக் காரணி எனப்படுகிறது.
ஆபத்துக் காரணி கொண்டிருப்பதால் உங்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று அர்த்தமல்ல; அதேபோல், ஆபத்துக் காரணிகள் இல்லாததால் உங்களுக்கு புற்றுநோய் வராது என்றும் கூறவியலாது.
வயிற்றுப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகள்
வயிற்றுப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகளில் பின்வருபவையும் அடங்கும்:
ஹெலிகோபேக்டர் பைலரி நோய்த்தொற்று
நீண்டகால வயிற்று அழற்சி
புகைப்பிடித்தல்
குடும்பத்தில் நிலவிய சரித்திரம்
உணவுமுறை, உடலுழைப்பு இன்மை, உடல் பருமன்
ஹெலிகோபேக்டர் பைலரி நோய்த்தொற்று
எச். பைலரி என்பது, பொதுவாக வயிற்றின் உட்புற உள்வரியில் (உட்சவ்வு) நோய்த்தொற்று ஏற்படுத்தும் ஒரு பேக்டீரியம்.
எச். பைலரி நோய்த்தொற்றினால் வயிற்று அழற்சியும் செரிமான குடற்புண்ணும் ஏற்படலாம்.
மேலும், வயிற்றுப் புற்றுநோய் ஆபத்தையும் அது அதிகரிக்கிறது; எனினும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுள் சிறியதொரு தொகையினருக்கே வயிற்றுப் புற்றுநோய் உண்டாகியுள்ளது.
நீண்டகால வயிற்று அழற்சி சார்ந்த நோய்நிலைகள் (நாசகரமான இரத்தச்சோகை போன்றவை) கொண்டவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோயிற்கான ஆபத்து அதிகம்.
மேலும், தங்கள் வயிற்றில் ஒரு பகுதி நீக்கப்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சைக்குப் பின் பல வருடங்களுக்கு நீண்டகால வயிற்று அழற்சியும் வயிற்றுப் புற்றுநோயிற்கான அதிக ஆபத்தும் நிலவலாம்.
புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
மிகுதியாக புகைப்பிடிப்பவர்களுக்கே மிக அதிகமான ஆபத்து உள்ளது.
குடும்பத்தில் நிலவிய சரித்திரம்
வயிற்றுப் புற்றுநோய் சரித்திரம் உள்ளவரின் நெருங்கிய உறவினர்களுக்கு (பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், அல்லது குழந்தைகள்) இந்நோய் உருவாகும் வாய்ப்பு சற்று அதிகம்.
பல நெருங்கிய உறவினர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் சரித்திரம் இருந்திருந்தால், ஆபத்து மேலும் அதிகமாக இருக்கும்.
புகைத்த, உப்பிட்ட, அல்லது ஊறுகாயிட்ட உணவுகளை மிகுதியாக உண்பவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோயிற்கான வாய்ப்பு அதிகம் என ஆய்வுகள் சுட்டுகின்றன.
மறுபுறம், மிகுதியாக பசுங்கனிகள் மற்றும் பசுமையான காய்கறிகளை மிகுதியாக சேர்த்துள்ள உணவு உண்பவர்களுக்கு இந்நோய் உருவாகும் ஆபத்து குறைவாக இருக்கலாம்.
போதிய உடலுழைப்பு இன்மையால் வயிற்றுப் புற்றுநோயிற்கான ஆபத்து அதிகரிக்கலாம்.
மேலும், உடல்பருமன் கொண்டவர்களுக்கு வயிற்றின் மேற்புறத்தில் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகமாக இருக்கலாம்.
போதிய உடலுழைப்பு இன்மை அல்லது உடல்பருமன்
50 வயதுக்குப் பிறகு வயிற்றுப் புற்றுநோய் சம்பவிப்பதில் திடீர் உயர்வு நிலவுகிறது.
60 முத்ல் 80 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கே பெரும்பாலும் வயிற்றுப் புற்றுநோய் உள்ளதாக நோய்க்குறி அறியப்படுகிறது.
இரத்த வகைகள் என்பவை, இரத்த சிவப்பணுக்கள் மற்றும் வேறு சில வகை செல்களின் மேற்பரப்பில் சாதாரணமாக இடம்பெற்றிருக்கும் சில வேதிப்பொருள்களை குறிக்கின்றன.
இரத்தம் ஏற்றுதல்களுக்காக பொருத்தம் காணுவதற்கு இந்த வகைகள் முக்கியத்துவம் கொண்டுள்ளன.
அறியப்படாத காரணங்களுக்கு, ‘ஏ’ வகை இரத்தம் கொண்டவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகம்.
கரி, உலோகம், மற்றும் ரப்பர் தொழிதுறைகளில் உள்ள பணியாளர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகம் எனத் தோன்றுகிறது.
- A person who smokes cigarettes may be at increased risk of developing polyps and colorectal cancer.
www.magnahealthsolutions.com