வயிற்றுப் புற்றுநோயின் அடையாளங்கள் யாவை?
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
காயம், சுகவீனம், நோய் ஆகியவற்றுக்கான சமிக்ஞைகள், அல்லது உடலில் ஏதோ கோளாறு உள்ளது என்பதற்கான சமிக்ஞைகள்
அடையாளம்: பிறிதொருவரால் காணவியலும் சமிக்ஞை
உதாரணமாக, காய்ச்சல், மூச்சு இரைத்தல், ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்கும் இயல்பற்ற நுரையீரல் ஓசைகள் ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அடையாளங்களாக இருக்கலாம்.
அறிகுறி: அதைக் கொண்டுள்ளவரே உணருகிற அல்லது கவனிக்கிற, ஆனால் பிறிதொருவரால் எளிதாகக் காணவியலாத சமிக்ஞை.
உதாரணமாக, பலவீனம், இசித்தல், மூச்சு முட்டுதல் உணர்வு ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அறிகுறிகளாக இருக்கலாம்.
வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள்
வயிற்றுப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு அரிதாகவே இந்நோயின் ஆரம்பகட்டத்தில் அறிகுறிகள் தோன்றுகின்றன.
ஆரம்பகட்டத்தில் வயிற்றுப் புற்றுநோயை கண்டறிவது ஏன் மிகவும் சிரமம் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
இந்த புற்றுநோய்க்கு பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளும் தோன்றுகின்றன:
உண்பதற்கு ஆர்வமின்மை (பசிக் குறைவு)
திட்டமிடாமல் எடை குறைதல்
சிறியளவில் சாப்பிட்ட பிறகு நெஞ்சுக்கு சற்று கீழே உடல்நிரம்பியுள்ள உணர்வு
நெஞ்சு எரிச்சல், அஜீரணம், அல்லது குடற்புண் அறிகுறிகள்
சிறியளவில் சாப்பிட்ட பிறகு நெஞ்சுக்கு சற்று கீழே உடல்நிரம்பியுள்ள உணர்வு
நெஞ்சு எரிச்சல், அஜீரணம், அல்லது குடற்புண் அறிகுறிகள்
குமட்டல்
இரத்தம் சேர்ந்த அல்லது சேராத வாந்தி
அடிவயிற்றில் வீக்கம் அல்லது நீர் கோர்த்தல்
இவற்றில் பல அறிகுறிகள், புற்றுநோய் அல்லாத வேறு பிரச்சனைகளாலும் ஏற்படலாம்.
எனினும், இந்தப் பிரச்சனைகள் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு அவை சரியாகாமல் இருந்தால் அல்லது மோசமடைந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்கவேண்டும்.
www.magnahealthsolutions.com