வயிற்றுப் புற்றுநோயிற்கான நோய்க்குறி அறிதல் பரிசோதனைகள்
உடற் பரிசோதனை மற்றும் சரித்திரம்
இரத்த வேதியியல் ஆய்வுகள்
முழுமையாக இரத்த எண்ணிக்கை
மேற்புற எண்டோஸ்கோபி
மறைமுக மலம் இரத்தப் பரிசோதனை
பேரியம் விழுங்கல்
பயாப்சி
சிடீ ஸ்கேன்
வயிறு மற்றும் உணவுக்குழாயை சோதிப்பதற்கான பரிசோதனைகளே வயிற்றுப் புற்றுநோயை கண்டறிவதற்கும் நோய்க்குறி அறிவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
உடற் பரிசோதனை மற்றும் சரித்திரம்
புடைப்புகள் அல்லது ஏதேனும் வழக்கத்திற்கு மாறாக தோன்றுபவைகள் போன்ற நோய் அடையாளங்களை பரிசோதிப்பது உட்பட, பொதுவான சுகாதார அடையாளங்கள் குறித்து உடலை பரிசோதித்தல்.
நோயாளியின் சுகாதாரப் பழக்கவழக்கங்கள், கடந்தகால சுகவீனங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்த சரித்திரமும் பரிசீலிக்கப்படும்.
உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களால் இரத்தத்தினுள் வெளிவிடப்படும் சில வேதிப்பொருள்களின் தொகைகளைஅளவிடுவதற்காக ஓர் இரத்த மாதிரி சோதிக்கப்படும் நடைமுறை.
ஒரு வேதிப்பொருள் வழக்கத்திற்கு மாறான (இயல்பை விட கூடுதலாக அல்லது குறைவாக) அளவில் இருப்பது, அதை உற்பத்தி செய்யும் உறுப்பு அல்லது திசுவில் நோய் ஏற்பட்டுள்ளதன் அடையாளமாக இருக்கலாம்.
முழுமையான இரத்த எண்ணிக்கை
அது பின்வரும் விஷயங்கள் குறித்து சோதிக்கப்படுவதற்காக ஓர் இரத்த மாதிரி எடுக்கப்படும் நடைமுறை:
இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கை
இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் (ஆக்சிஜன் சுமந்துசெல்கிற புரதம்) அளவு.
மாதிரியில் இரத்த சிவப்பணுக்கள் உள்ள பகுதி.
இயல்பற்ற பகுதிகள் உள்ளனவா என சோதிப்பதற்காக உணவுக்குழாய், வயிறு, முன்சிறுகுடல் (சிறுகுடலின் முதற் பகுதி) ஆகியவற்றின் உட்புறத்தை நோக்குவதற்கான ஒரு நடைமுறை.
வாய் வழியாக தொண்டை மூலம் உணவுக்குழாயினுள் செலுத்தப்படும் ஓர் எண்டோஸ்கோப் (ஒரு மெல்லிய, விளக்கிட்ட குழல்)
மலத்தில் (திடக் கழிவு) இரத்தம் தோய்ந்துள்ளதா என சோதிப்பதற்கான பரிசோதனை; இதை நுண்ணோக்கி வழியாக மட்டுமே பார்க்கவியலும்.
சிறப்பு அட்டைகள் மீது மலத்தின் சிறிய மாதிரிகள் வைக்கப்பட்டு, அது பரிசோதனைக்காக மருத்துவர் அல்லது பரிசோதனை நிலையத்திடம் ஒப்படைக்கப்படும்.
மறைமுக மலம் இரத்தப் பரிசோதனை
உணவுக்குழாய் மற்றும் வயிற்றுக்கான எக்ஸ்-ரே படங்களின் ஒரு வரிசை.
பேரியம் (வெள்ளி நிற உலோகச் சேர்மம்) உள்ள ஒரு திரவத்தை நோயாளி குடிப்பார்.
உணவுக்குழாய் மற்றும் வயிற்றை இந்தத் திரவம் போர்த்திக்கொள்ளும்; பிறகு, எக்ஸ்-ரே எடுக்கப்படும்.
இந்த நடைமுறை மேற்புற ஜிஐ சீரீஸ் என்று அழைக்கப்படுகிறது.
பேரியம் விழுங்கல்
புற்றுநோய் அடையாளங்கள் உள்ளதா என சோதிப்பதற்காக நுண்ணோக்கி மூலம் நோக்குவதற்கு செல்கள் அல்லது திசுக்களை எடுத்தல்.
எண்டோஸ்கோபி நடைமுறையின் போது வழக்கமாக வயிற்றுக்கான பயாப்சி செய்யப்படும்.
வெவ்வேறு கோணங்களிலிருந்து உடல் உட்பகுதிகளின் விரிவான படங்களின் ஒரு வரிசையை உருவாக்கும் நடைமுறை.
ஓர் எக்ஸ்-ரே எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியால் இந்த படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
உறுப்புகள் அல்லது திசுக்களை மேலும் தெளிவாகக் காட்டுவதற்கு, சிரைவழி ஊசி மூலம் அல்லது வாய்வழி மருந்தாக ஒரு நிறமி கொடுக்கப்படலாம்.
The stage is based on where cancer is found
Stage I: Cancer cells are found only in the cervix.
Stage II: The tumor has grown through the cervix and invaded the upper part of the vagina. It may have invaded other nearby tissues but not the pelvic wall (the lining of the part of the body between the hips) or the lower part of the vagina.
Stage III: The tumor has invaded the pelvic wall or the lower part of the vagina. If the tumor is large enough to block one or both of the tubes through which urine passes from the kidneys, lab tests may show that the kidneys aren’t working well.
Stage IV: The tumor has invaded the bladder or rectum. Or, the cancer has spread to other parts of the body, such as the lungs.
www.magnahealthsolutions.com