வயிற்றுப் புற்றுநோய் தடுப்பு
வயிற்றுப் புற்றுநோயை தடுப்பது சாத்தியமா?
வயிற்றுப் புற்றுநோயின் மிகச் சரியான காரணத்தை நாம் அறிவதில்லை என்றபோதிலும், பல வயிற்றுப் புற்றுநோய்களை தடுப்பது சாத்தியமே
புகையிட்ட மற்றும் ஊறுகாயிட்ட உணவுகளும் உப்பிட்ட மீன் மற்றும் இறைச்சிகளும் மிகுந்தளவு உண்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
நிறைய பசுங்கனிகளும் காய்கறிகளும் சேர்த்த உணவை உண்பது வயிற்றுப் புற்றுநோய் ஆபத்தை குறைக்கலாம்.
எலுமிச்சை வகை பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை, பப்ளிமாஸ் போன்றவை) குறிப்பாக உதவியாக இருக்கலாம்; எனினும், சில மருந்துகளின் இரத்தநிலை அளவுகளை பப்ளிமாஸ் மற்றும் பப்ளிமாஸ் சாறு அதிகரித்துவிடலாம்; எனவே, உங்கள் உணவில் பப்ளிமாஸ் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் சுகாதார கவனிப்புக் குழுவினருடன் கலந்தாலோசிப்பது முக்கியம்.
தாவர உணவுகளை வலியுறுத்தும் ஓர் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
இதில் தினமும் குறைந்தபட்சம் 21/2 கோப்பைகள் அளவுக்கு கனிகள் மற்றும் காய்கறிகளை உண்ணுவதும் அடங்கும்.
தூய்மித்த (தீட்டிய) தானியங்களுக்கு பதிலாக முழு-தானிய உணவுகளையும் தானியக் கூலத்தையும் உண்ணுங்கள்.
செவ்விறைச்சி உண்பதை - குறிப்பாக, பதனிடப்பட்ட அல்லது உயரளவு கொழுப்பு உள்ளவற்றை - குறைத்துக்கொள்ளுங்கள்.
உடல்பருமன் வயிற்றுப் புற்றுநோயிற்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.
கலோரி உட்கொள்வதையும் உடலுழைப்பையும் சமன்பாட்டில் வைப்பது மூலம் ஆயுட்காலம் நெடுக ஓர் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவேண்டும் என அமெரிக்க புற்றுநோய் சங்கம் பரிந்துரைக்கிறது.
எடை குறைதல் வயிற்றுப் புற்றுநோயிற்கான ஆபத்து மீது சாத்தியமான விளைவுகள் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், வேறு பல புற்றுநோய்கள் சார்ந்தும் உடல்பருமன் தொடர்பான சுகாதாரப் பிரச்சனைகள் சார்ந்தும் விளைவுகளை உண்டாக்கலாம்.
புகையிலையை தவிர்த்துவிடுங்கள்
புகையிலைப் பயன்பாட்டால் அண்மை வயிற்று (உணவுக்குழாய்க்கு மிக அருகில் உள்ள வயிற்றின் பகுதி) புற்றுநோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கலாம்.
வயிற்றின் உள்வரிகளில் எச். பைலரி பேக்டீரியாவால் முற்றிய நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள ஆனால் அறிகுறிகள் ஏதும் இல்லாத நபர்களுக்கு ஆண்ட்டிபயோடிக் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து இதுவரை தெளிவுபாடு இல்லை.
இது தற்போதைய ஆராய்ச்சிக்கான ஒரு தலைப்பு.
எச். பைலரி நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு ஆண்ட்டிபயோடிக் மருந்துகள் அளிப்பதால் வயிற்றில் உள்ள புற்றுக்கு-முந்தைய சிதைவுகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் வயிற்றுப் புற்றுநோய் உருவாகும் ஆபத்தை குறைக்கலாம் என்றும் சில ஆரம்பகால ஆய்வுகள் சுட்டுகின்றன.
எனினும், எல்லா ஆய்வுகளும் இதைச் சுட்டுவதில்லை.
எச். பைலரி நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு இது வயிற்றுப் புற்றுநோயை தடுப்பதற்கான வழி என்பதை உறுதிப்பட அறிவதற்கு கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை.
இயலும்போது ஆபத்துக் காரணிகளை தவிர்ப்பது ஒருவருக்கு வயிற்றுப் புற்றுநோய் ஆபத்தை குறைக்கலாம்; எனினும், அது இந்நோய் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காது.
சிகிச்சையின் வெற்றிவாய்ப்பை அதிகரிப்பதற்கும் இந்நோயால் ஏற்படும் மரண எண்ணிக்கைகளை குறைப்பதற்கும் மிகச்சிறந்த வழி, ஆரம்பகட்ட கண்டறிதலே ஆகும்.
www.magnahealthsolutions.com