விரைப் புற்றுநோய்
என்றால் என்ன?
விரைகள்
விரைகள் என்பவை விரைப்பைக்குள் (ஆணுறுப்பிற்கு நேர் கீழே உள்ள தொங்கலான சருமப் பை) அமைந்துள்ள 2 முட்டை-வடிவ சுரப்பிகளாகும்

விரைகள் என்பவை விரைப்பைக்கு உள்ளே விரை நாண்களால் பிடிக்கப்பட்டுள்ளன, அவ்விரைப்பை தான் விந்தணு வெளியேறு குழல்களையும் விரைகளின் இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளையும் கொண்டுள்ளது.

விரைகள் என்பவை தான் ஆண் பால் சுரப்பிகளாகும் மேலும் அவை டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனையும் விந்துவையும் உற்பத்தி செய்கின்றன
விரைகளுக்கு உள்ளே உள்ள ஜீவ அணுக்கள் தான், நுண் குழாய்கள் கொண்டதோர் வலையமைப்பு வழியாகச் சென்று விந்தணு முதிர்ச்சிப்பைக்குள் (எபிடிடிமிஸ்) (விரைகளுக்கு அடுத்துள்ள ஓர் நீண்ட சுருண்ட குழாய்) பயணிக்கிற, முதிர்வுறாத விந்துவை உற்பத்தி செய்கின்றன.

அவ்விந்து முதிர்ச்சியடைந்து, விரைகளில் இருப்பு வைக்கப்படுகிறது
விரைப் புற்றுநோய்
விரைப் புற்றுநோய் என்பது, ஒன்று அல்லது இரண்டு விரைகளின் திசுக்களில் புற்றுப்பண்புள்ள (மெலிக்னண்ட்) அணுக்கள் உருவாகின்றதோர் நோயாகும்.

கிட்டத்தட்ட அனைத்து விரைப் புற்றுநோய்களுமே ஜீவ அணுக்களில் தான் ஆரம்பிக்கின்றன
வகைகள்
ஜெர்ம் செல் டியூமர்ஸ் (ஜீவ அணுப் புற்றுக் கட்டிகள்): இவை தான், விரைப் புற்றுக்கட்டிகளிலேயே மிகவும் பொதுவானதாகும். ஜீவ அணுப் புற்றுக்கட்டிகள், விந்துவை உண்டாக்குகிற அணுக்களிலேயே ஆரம்பிக்கின்றன

ஸ்டிரோமல் டியூமர்ஸ் (நடு (ஸ்டிரோமா) அடுக்குப் புற்றுக்கட்டிகள்): இது, ஹார்மோன்களை உருவாக்குகிற அணுக்களிலும், விந்துவை உருவாக்குகிற அணுக்களை ஆதரிக்கிற அணுக்களிலும் ஆரம்பிக்கிறது

இ‏ரண்டாம் நிலை விரைப் புற்றுக்கட்டிகள்: உடலின் மற்ற பாகங்களிலிருந்து விரைகளுக்குப் பரவியிருக்கிற புற்றுநோயிலிருந்து ஆரம்பிக்கிறது

ஜெர்ம் செல் டியூமர்ஸ் (ஜீவ
அணுப் புற்றுக் கட்டிகள்)
ஜீவ அணுப் புற்றுக்கட்டிகளின் முக்கியமான 2 வகைகள், செமினோமாஸ் மற்றும் நான்செமினொமாஸ் என்பவையாகும்

செமினோமாஸ்
விந்துவை உண்டாக்குகிற விரைகளின் ஜீவ அணுக்களிலிருந்து ஆரம்பிக்கின்றன

இ‏ந்தக் குழுவிற்குள், இரண்டு துணைவகைகளும் உள்ளன

செமினோமாஸ் புற்றுக்கட்டி வழக்கமாக ஆண்கள் 25 மற்றும் 45 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்கும் போதே அவர்களில் தொன்றுகிறது
நான்செமினோமாஸ்
செமினோமாஸ் புற்றுக்கட்டியை விட, ஆயுளின் ஆரம்ப காலத்திலேயே தோன்ற முயற்சிக்கின்றன

அவை பெரும்பாலும் ஆண்களில், அவர்களது பதின்வயதின் பின்பகுதியிலும், 30 வயதுகளின் ஆரம்பத்திலும் காணப்படுகின்றன

இதில் 4 முக்கியமான துணை வகைகள் உள்ளன

பெரும்பாலான புற்றுக்கட்டிகள், குறைந்தது 2 துணைவகள் கொண்டுள்ள கலப்பானவையாகும்.

ஆனால் அனைத்து நான்செமினோமா ஜீவ அணுப் புற்றுக்கட்டிகளுமே ஒரே வழியில் தான் சிகிச்சையளிக்கப்படுகின்றன, ஆகவே மிகச் சரியான வகை என்ன என்பது அந்தளவிற்கு முக்கியமானதல்ல.

ஸ்டிரோமல் டியூமர்ஸ் (நடு (ஸ்டிரோமா) அடுக்குப்
புற்றுக்கட்டிகள்)
ஹார்மோன்களை உண்டாக்குகிற அணுக்களிலும், அதற்குத் துணையாக அமைகிற விரைகளின் திசுக்களிலும் (ஸ்டிரோமா) புற்றுக்கட்டிகள் வளரக்கூடும்.

ஸ்டிரோமா அணுக் கட்டிகள் (டியூமர்ஸ்) பெரு தீங்கற்றவையாகும் (புற்றுநோய் அல்லாத்வை)

அவை வழக்கமாக விரையைத் தாண்டி வளர்வதில்லை மேலும் அவற்றை வெளியே எடுத்துவிடுவதன் மூலம் அவற்றைக் குணப்படுத்திவிடலாம். ஆனால் சில ஸ்டிரோமல் அணுக் கட்டிகள் (டியூமர்ஸ்) உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி விடுகின்றன (மெட்டாஸ்டேசைஸ்)

மெட்டாஸ்டேட்டிக் ஸ்டிரோமா அணுப் புற்றுக்கட்டிகள் மோசமான தோற்றத்தை உடையவையாக உள்ளன ஏனென்றால் அவை வேதிச்சிகிச்சைமுறைக்கோ அல்லது கதிரியக்கச் சிகிச்சைக்கோ நன்றாகப் பதிலளிப்பதில்லை
இ‏ரண்டாம் நிலை விரைப் புற்றுக்கட்டிகள்
இப்புற்றுக்கட்டிகள், மற்றொரு உடலுறுப்பில் ஆரம்பித்து, விரைகளுக்குப் பரவுகின்றன

லிம்·போமா தான், இதனைச் செய்கிற மிகவும் பொதுவான புற்றுநோயாகும். தீவிர லியூக்கேமியா உள்ள பையன்களில், லியூக்கேமியா அணுக்கள் சில நேரங்களில் விரைகளில் ஓர் கட்டியை (டியூமர்) உருவாக்கிவிட முடியும்

ஆண்மைச் சுரப்பி, நுரையீரல், சருமம், சிறுநீரகம் மற்றும் மற்ற உடலுறுப்புகளில் உள்ள புற்றுநோயும் விரைகளுக்குப் பரவ முடியும்

இ‏த்தகைய புற்றுக்கட்டிகளின் தோற்றம் வழக்கமாகவே மோசமாகத் தான் உள்ளது. அது ஏனென்றால், மிகப் பெரும்பா‎லும், இப்புற்றுக்கட்டிகள் பரவலாகவே மற்ற உடலுறுப்புக்களுக்கும் பரவியிருக்கின்றன

சிகிச்சையானது, புற்றுநோயின் மிகச் சரியான வகையைப் பொருத்தே இருக்கிறது
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com