விரைப் புற்றுநோயை
உண்டாக்குவது எது?
ஆபத்துக் காரணிகள்
ஒரு நோயைப் பெற்றுக் கொள்வதற்கு உங்களுக்குள்ள வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிற எதுவும், ஒரு ஆபத்துக் காரணிஎன்று அழைக்கப்படுகிறது.

ஒரு ஆபத்துக் காரணி இருப்பது என்பது உங்களுக்குப் புற்றுநோய் வந்துவிடும் என்று அர்த்தமாவதில்லை; ஆபத்துக் காரணிகள் இல்லாமலிருப்பதற்கு‏ உங்களுக்குப் புற்றுநோயே வராது என்றும் அர்த்தமாவதில்லை.
விரைப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகள்
விரைப் புற்றுநோயிற்கான ஆபத்துக் காரணிகளில் பின்வருபவை அடங்குகின்றன:

கீழிறங்காத விரை (கிரிப்டார்சைடிசம்)
குழந்தைப் பிராய‏ இயல்பிற்கு மாறான தன்மைகள்
விரைப் புற்றுநோயின் வரலாறு
விரைப் புற்றுநோயின் குடும்ப வரலாறு
இயல்பிற்கு மாறான விரை வளர்ச்சி
கீழிறங்காத விரை (கிரிப்டார்சைடிசம்)
சாதாரணமாக, பிறப்பிற்கு முன்பாக விரைகள் அடிவயிற்றுக்கு உள்ளிருந்து விரைப்பைக்கு உள்ளே கீழிறங்குகின்றன

விரைப்பைக்கு உள்ளே கீழ் நகராத விரையுள்ள ஆண்களில், விரைப் புற்றுநோயிற்கான ஆபத்து அதிகரிக்கிறது

விரையை விரைப்பையிற்குள் நகர்த்துவதற்கான அறுவைச் சிகிச்சைக்குப் பின்பும் கூட இந்த ஆபத்து மாறுவதில்லை

இரு விரைகளுக்குமே இவ்வதிகரித்த ஆபத்து பொருந்துகிறது
குழந்தைப் பிராய‏ இயல்பிற்கு
மாறான தன்மைகள்
விரைகள், ஆணுறுப்பு அல்லது சிறுநீரகங்களி‎ல் இயல்பிற்கு மாறான தன்மைகளோடு பிறக்கிற ஆண்கள்

இங்வினல் ஹெர்னியா (தொடை அடிவயிற்றோடு இணைகிற அரைப்பகுதியில் குடல் இறக்கம்) உள்ள ஆண்கள், அதிகரித்த ஆபத்தில் இருக்கலாம்
விரைப் புற்றுநோயின் வரலாறு
விரைப் புற்றுநோய் இருந்திருக்கிற ஆண்கள், அடுத்த விரையிலும் புற்றுநோய் தோன்றி விடுவதற்கான அதிகரித்த ஆபத்தில் இருக்கிறார்கள்.
விரைப் புற்றுநோயின் குடும்ப வரலாறு
சகோதர‎ர் அல்லது தந்தைக்கு இந்நோய் இருந்திக்கிற ஆண்களில், விரைப் புற்றுநோயிற்கான ஆபத்து மிக அதிகமானதாகும்.
இயல்பிற்கு மாறான விரை வளர்ச்சி
க்ளின்·பெல்டெர்ஸ் சிண்ட்ரோம் போன்ற நிலைமைகள், இதில் விரைகள் இயல்பாக வளர்ச்சியடையாமல், விரைப் புற்றுநோயிற்கான ஒரு நபரின் ஆபத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும்.
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com