விரைப் புற்றுநோயின் அடையாளங்கள் மற்றும்
அறிகுறிகள் என்னென்ன?
அடையாளங்களும் அறிகுறிகளும்
காயம், சுகவீனம், நோய் அல்லது உடலில் சரியாக இல்லாத ஏதோவொன்றின் சமிக்கைகள்

அடையாளம்: வேறு ஏதோவொன்றினால் காணமுடிகிற சமிக்கை
உதாரணமாக, காய்ச்சல், வேகமான சுவாசம், மற்றும் ஸ்டெத்தாஸ்கோப் வாயிலாக‏ இயல்பிற்கு மாறான நுரையீரல் ஒலிகள் கேட்பது ஆகியவை நிமோனியாவின் அடையாளங்களாக இருக்கலாம்.

அறிகுறி: சமிக்கைகள் உள்ள நபரால் உணரப்படுகிற அல்லது அறிவிக்கப்படுகிற ஆனால் வேறு யாராலும் எளிதாகக் காண முடியாத சமிக்கைகள்.
உதாரணமாக, பலவீனம், நோவெடுத்தல் மற்றும் மூச்சுத்திணறலாக உணர்தல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.
விரைப் புற்றுநோய் அடையாளங்கள்
விரைப் புற்றுநோயி‎னால் ஏற்படக்கூடிய அடையாளங்களில், விரைப்பையில் வீக்கம் அல்லது அசௌகரியம் அடங்குகிறது.

இத்தகைய மற்றும் மற்ற அறிகுறிகளும் விரைப் புற்றுநோயினால் உண்டாக்கப்படலாம்
இரு விரையிலும் ஓர் வலியில்லாத திரட்சி அல்லது வீக்கம்


ஒரு விரை எவ்விதம் உணர்கிறது என்பதில் ஓர் மாற்றம்


விரைப்பையில் திடீரென்றதோர் திரவத் தேக்கம்
அடிவயிற்றின் கீழ்ப் பகுதியில் அல்லது அரைப்பகுதியில் ஓர் மந்தமான நோவு
ஒரு விரையில் அல்லது விரைப்பையில் வலி அல்லது அசௌகரியம்
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com