விரைப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தல்/நோய்ப்பாதிப்பு ஆய்வு(ஸ்க்ரீனிங்) செய்தல்
நோய்ப்பாதிப்பு ஆய்வு (ஸ்க்ரீனிங்)
எவ்வித அறிகுறிகளுமே இல்லாதவர்களில், புற்றுநோய் போன்றதோர் நோயைக் கண்டுபிடிப்பதற்காக உபயோகிக்கிற பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள்.


ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடித்தல்
மற்றபடி கண்டுபிடிப்பதை விட ஆரம்பகாலத்திலேயே விரைப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க வழிசெய்கிற ஒரு அணுகுமுறையை உபயோகித்தல்.
விரைப் புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே
கண்டுபிடித்துவிட முடியுமா?
பெரும்பாலான விரைப் புற்றுநோய்களை ஒரு ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும்
சில ஆண்களில், ஆரம்பகட்ட விரைப் புற்றுநோய்கள், மருத்துவ உதவியை அவர்கள் நாடச் செய்யும் அளவிற்கு, அறிகுறிகளை உண்டாக்கி விடுகின்றன
பெரும்பாலான நேரங்களில், விரையில் ஏற்படுகிறதோர் திரட்சியே முதல் அடையாளமாகி விடுகிறது
ஆயினும், துரதிஷ்டவசமாக, சில விரைப் புற்றுக்கட்டிகள், ஒரு முற்றிய நிலையை அடைந்திருப்பதற்குப் பின்பு வரை, அறிகுறிகளை உண்டாக்காமல் இருக்கலாம்
ஒரு ஆணின் விரைகளை ஆய்வு செய்வது என்பது ஓர் பொது உடற்பரிசோதனையின் ஓர் பகுதியாக இருக்க வேண்டும் எ‎ன்பதை பெரும்பாலான மருத்துவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்

வழக்கமான புற்றுநோய்-தொடர்புடைய பரிசோதனையின் ஒரு பகுதியாக ஓர் விரைப் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும் என்றே அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் (ஏசிஎஸ்) சிபாரிசு செய்கிறது

விரைப் புற்றுநோய் குறித்துத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு விரையில் திரட்சி எதுவும் இருப்பதாக அவர்கள் காண்கிற பட்சத்தில் அப்போதே ஒரு மருத்துவரைப் பார்க்கும்படியும் ஆண்களுக்கு ஏசிஎஸ் ஆலோசனையளிக்கிறது
விரைப்புற்றுநோய் தோன்றுவதற்கான உங்களுக்குள்ள வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிற ஒருசில ஆபத்துக் காரணிகள் உங்களுக்கு இருக்கிற பட்சத்தில் (கீழிறங்காத விரை, ஒரு விரையில் முன்பே இருந்த ஜீவ அணுப் புற்றுக்கட்டி, அல்லது ஓர் குடும்ப வரலாறு), நீங்கள் மாதாமாதம் பரிசோதனை செய்வதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
சுய விரைப் பரிசோதனை
உங்கள் விரைகளை பரிசோதனை செய்வதற்கான மிகச் சிறந்த நேரம் என்பது குளித்த பிறகு அல்லது தூவாலைக் குளியல் எடுத்த பிறகேயாகும், அப்போது விதைப்பையின் சருமம் தளர்வடைந்திருக்கிறது.

ஆணுறுப்பைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு, ஒவ்வொரு விரையையும் தனித்தனியாக ஆய்வு செய்யவும்
விரைகளை உங்கள் பெருவிரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையே வைத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அதனை விரல்களுக்கு இடையே நாசுக்காக உருட்டவும்
கடினமான திரட்சிகள் அல்லது கட்டிகள் (மிருதுவான வட்டவடிவ திரள்கள்) ஏதும் உள்ளதா என அல்லது விரைகளின் அளவு, வடிவம் அல்லது ஒத்ததன்மையில் மாற்றம் எதுவும் உள்ளதா எனத் தொட்டுப் பாருங்கள்
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com