விரைப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் அதன் நிலையறிதல்
விரை மற்றும் இரத்தத்தை ஆய்வு செய்வதற்கான பரிசோதனைகள் தான், விரைப் புற்றுநோயைக் கண்டுபிடித்து, நோயறிவதற்கும் உபயோகிக்கப்படுகின்றன.

பின்வரும் பரிசோதனைகளும் நடைமுறைகளும் உபயோகிக்கப்படலாம்:
உடற்பரிசோதனை மற்றும் வரலாறு
மீவொலி பரிசோதனை
சீரம் டியூமர் மார்க்கர் பரிசோதனை
ரேடிக்கல் இங்குவினல் ஆர்க்கியக்டமி மற்றும் உடற்திசு ஆய்வு


மருத்துவ வரலாறு மற்றும் உடற் பரிசோதனை
திரட்டுகள் போன்ற, நோயின் அடையாளங்களுக்காக சோதிப்பது, வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றுகிற வேறு ஏதையேனும் சோதிப்பது உட்பட, உடல்நலம் குறித்த பொதுவான அடையாளங்களை சோதிப்பதற்காக ஓர் உடற்பரிசோதனை.
திரட்டுகள், வீக்கம், அல்லது வலி இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக விரைகள் ஆய்வு செய்யப்படும்
நோயாளியின் உடல்நலப் பழக்க வழக்கங்கள் மற்றும் கடந்த கால சுகவீனங்கள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவை குறித்ததோர் வரலாறும் எடுத்துக் கொள்ளப்படும்
மீவொலி பரிசோதனை
இது, அதிக-சக்தி வாய்ந்த ஒலி அலைகள் (மீவொலி அலைகள்) உடலுக்கு உள்ளேயுள்ள திசுக்கள் அல்லது உறுப்புகளிம் மோதி, எதிரொலிகளை உண்டாக்குகிறதோர் நடைமுறையாகும்
அவ்வெதிரொலிகள், சோனோகிராம் என்று அழைக்கப்படுகிற உடல் திசுக்கள் குறித்ததோர் படத்தை உருவக்கின்றன
சீரம் டியூமர் மார்க்கர் பரிசோதனை
-இது, உடலில் உள்ள உறுப்புக்கள் திசுக்கள், அல்லது புற்றுக்கட்டி அணுக்கள்‏ இரத்தத்திற்குள் வெளியிடுகிற ஒருசில வேதிப்பொருட்களின் அளவை அளவிடுவதற்காக ஒரு இரத்த மாதிரியை ஆய்வு செய்கிறதோர் நடைமுறையாகும்

-ஒருசில வேதிப்பொருட்கள் இரத்தத்தில் அதிகரித்த அளவுகளில் காணப்படுகிற போது புற்றுநோயின் குறிப்பிட்ட வகைகளோடு தொடர்புடையவையாக இருக்கின்றன

-‏இவை தான் புற்றுக்கட்டிக் குறிகாட்டிகள் (டியூமர் மார்க்கர்ஸ்) என அழைக்கப்படுகின்றன
சீரம் டியூமர் மார்க்கர் பரிசோதனை
விரைப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்குப் பின்வரும் 3 புற்றுக்கட்டிக் குறிகாட்டிகள் உபயோகிக்கப்படுகின்றன:
ஆல்·பா-·பிட்டோபுரோட்டீன் (ஏஎ·ப்பீ)
பீட்டா-ஹியூமன் கோரியானிக் கோனடோட்ரோப்பின் (β-hCG)
லேக்டேட் டீஹைட்ரோஜினேஸ் (LDH)

ரேடிக்கல் இங்வினல் ஆர்கியெக்டமி மற்றும் உடற்திசு ஆய்விற்கு முன்பாகவே, விரைப் புற்றுநோயைக் கண்டறிவதற்கு உதவுவதற்காக, புற்றுக்கட்டிக் குறிகாட்டி அளவுகள் அளவிடப்படுகின்றன.
ரேடிக்கல் இங்குவினல் ஆர்க்கியக்டமி மற்றும் உடற்திசு ஆய்வு
அரைப்பகுதியில் செய்கிற ஒரு அறுவைச் சிகிச்சை வெட்டு வாயிலாக ஒட்டுமொத்த விரையையுமே அகற்றியெடுப்பதற்கானதோர் நடைமுறை

அதன் பின், புற்றுநோய் அணுக்கள் உள்ளனவா எனப் பார்ப்பதற்காக, விரையீலிருந்து எடுத்த ஒரு திசு மாதிரி ஒரு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்வையிடப்படுகிறது. உடற்திசு ஆய்விற்காக திசு மாதிரியை அகற்றியெடுப்பதற்கு, அறுவைச் சிகிச்சை நிபுணர் விரைக்குள் செல்வதற்காக விரைப்பையின் ஊடாக வெட்டிச் செல்வத்தில்லை, ஏனென்றால் புற்றுநோய் இருக்கிற பட்சத்தில், இந்நடைமுறை அதனை விரைப்பையிற்கும், நிணநீர் முடிச்சுகளுக்கும் பரவச் செய்துவிடக் கூடும்.
நிலையறிதல்
விரைப் புற்றுநோயிருப்பதாகக் கண்டுபிடித்துவிட்ட பிறகு, அப்புற்றுநோய் அணுக்கள் விரைக்குள் மட்டும் தான் பரவியிருக்கிறதா அல்லது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறதா என்பதைக் காண்பதற்காக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

புற்றுநோய் விரைக்குள் பரவியிருக்கிறதா அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவியிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான நடைமுறை தான் நிலையறிதல் என்று அழைக்கப்படுகிறது

நிலையறியும் நடைமுறையிலிருந்து சேகரிக்கப்படுகிற தகவல்களே, அந்நோயின் நிலையைத் தீர்மானிக்கிறது.

சிகிச்சையைத் திட்டமிட வேண்டுமானால் நிலையைத் தெரிந்து கொள்வது முக்கியமானதாகும்
நிலையறியும் நடைமுறையில், பின்வரும் பரிசோதனைகளும் நடைமுறைகளும் உபயோகிக்கப்படலாம்:

மார்பு ஊடு-கதிர்
சிடீ ஸ்கேன்
லிம்·பாஞ்சியோகிரா·பி
அடிவயிற்று நிணநீர் முடிச்சு வெட்டு
சீரம் டியூமர் மார்க்கர் பரிசோதனை
மார்பு ஊடு-கதிர்
மார்புக்கூட்டிற்குள் உள்ள உறுப்புகள் மற்றும் எலும்புகளின் ஒரு ஊடுகதிர் படம்

ஒரு ஊடுகதிர் என்பது, உடல் வழியாக ஊடுறுவி, படச்சுருளுக்குள் சென்று, உடலுக்குள் உள்ள பகுதிகளின் படத்தை உருவாக்குகிற ஒருவகை ஆற்றல் கற்றை ஆகும்
எம்ஆர்ஐ ஸ்கேன்
ஒரு கணினியோடு இணைந்ததோர் சக்தி வாய்ந்த காந்தம், உங்கள் அடிவயிற்றின் அடிப்பகுதியின் விபரமான படங்களை எடுக்க உபயோகிக்கப்படுறது.

நிணநீர் முடிச்சுகளுக்கோ அல்லது மற்ற பகுதிகளுக்கோ புற்றுநோய் பரவியிருக்கிறதா என்பதை ஓர் எம்ஆர்ஐ ஸ்கேன் காண்பித்துவிட முடியும்

சில நேரங்களில், இயல்பிற்கு மாறான பகுதிகளை படத்தில் இன்னும் அதிகத் தெளிவாகக் கண்ணில் புலப்படச் செய்வதற்காக கருமைப் பொருள் உபயோகிக்கப்படுகிறது
லிம்·பாஞ்சியோகிரா·பி
இது, நிணநீர் மண்டலத்தை ஊடுகதிர் படம் எடுப்பதற்கு உபயோகிக்கிறதோர் நடைமுறையாகும்.

பாதத்தில் உள்ள நிணநீர் குழாய்களுக்குள் ஒரு நிறமி ஊசி மூலம் செலுத்தப்படுகிறது

அந்த நிறமி, நிணநீர் முடிச்சுகள் மற்றும் நிணநீர் குழாய்கள் வழியாக மேல்நோக்கிப் பயணிக்கிறது, மேலும் அங்கே அடைப்புகள் ஏதும் உள்ளனவா என்பதைப் பார்ப்பதற்காக ஊடு-கதி படங்கள் எடுக்கப்படுகின்றன

இப்பரிசோதனை, நிணநீர் முடிச்சுகளுக்கும் புற்றுநோய் பரவியிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறது
இது, அடிவயிற்றில் உள்ள நிணநீர் முடிச்சுகள் அகற்றியெடுக்கப்பட்டு, புர்றுநோயின் அடையாளங்களுக்காக அதன் திசு மாதிரி ஒன்று ஒரு நுண்ணோக்கியின் கீழ் வைத்து சோதித்துப் பார்க்கப்படுகிறது

நான்செமினோமா உள்ள நோயாளிகளைப் பொருத்த வரையில், அந்நிணநீர் முடிச்சுகளை அகற்றியெடுப்பது, நோய் பரவுவதைத் தடுத்து நிறுத்த உதவிபுரியலாம்

செமினோமா நோயாளிகளின் நிணநீர் முடிச்சுகளில் உள்ள புற்றுநோய் அணுக்களுக்கு, கதிரியக்கச் சிகிச்சைமுறை கொண்டு சிகிச்சையளிக்கலாம்
அடிவயிற்று நிணநீர் முடிச்சு வெட்டு
நிலை 1 விரைப் புற்றுநோய்
புற்றுநோய் உருவாகியிருக்கிறது
நிலை 1 என்பது, நிலை 1எ, நிலை 1பி மற்றும் நிலை 1எஸ் என்பதாகப் பிரிக்கப்பட்டு, ஒரு ரேடிக்கல் இங்வினல் ஆர்கியெக்டமி செய்த பிறகு தீர்மானிக்கப்படுகிறது.

நிலை 1எ
விரையிலும், எபிடிடிமிஸிலும் புற்றுநோய் இருக்கிறது மேலும் அது விரையைச் சுற்றியுள்ள சவ்வின் உள் அடுக்குகளுக்குப் பரவியிருக்கலாம்
அனைத்து புற்றுக்கட்டி குறிகாட்டி அளவுகளும் இயல்பாக உள்ளன
நிலை 1பி
விரையிலும், எபிடிடிமிஸிலும் புற்றுநோய் இருக்கிறது மேலும் அது இரத்தக் குழாய்களுக்கு அல்லது விரையில் உள்ள நிணநீர் குழாய்களுக்குப் பரவியிருக்கிறது
அல்லது விரையைச் சுற்றியுள்ள சவ்வின் வெளி அடுக்குகளுக்குப் பரவியிருக்கிறது
அல்லது அது விரை நாண் அல்லது விரைப்பையில் உள்ளது மேலும் அது இரத்தக் குழாய்களில் அல்லது விரை‏யின் நிணநீர் குழாய்களில் இருக்கலாம்
அனைத்து புற்றுக்கட்டி குறிகாட்டி அளவுகளும் இயல்பாக உள்ளன
நிலை 1
நிலை 1எஸ்
விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் புற்றுநோய் காணப்படுகிறது மேலும் அது
அனைத்து புற்றுக்கட்டி குறிகாட்டி அளவுகளும் இயல்பை விட சற்று மேலே உள்ளன; அல்லது
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புற்றுக்கட்டி குறிகாட்டி அளவுகள் இயல்பை விட சற்று மேலே அல்லது உயர்வாக உள்ளன
நிலை 2
நிலை 2 என்பது, நிலை 2எ, நிலை 2பி மற்றும் நிலை 2சி என்பதாகப் பிரிக்கப்பட்டு, ஒரு ரேடிக்கல் இங்வினல் ஆர்கியெக்டமி செய்த பிறகு தீர்மானிக்கப்படுகிறது.

நிலை 2எ-வில் புற்றுநோய்
விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் புற்றுநோய் உள்ளது; மேலும்
அடிவயிற்றில் உள்ள 5 நிணநீர் முடிச்சுகள் வரை பரவியிருக்கிறது, எதுவுமே 2 செண்டிமீட்டர்களை விட பெரிதாக இல்லை
அனைத்து புற்றுக்கட்டி குறிகாட்டி அளவுகளுமே இயல்பாக உள்ளன அல்லது இயல்பை விட விட சற்று மேலே உள்ளன
நிலை 2பி-யில் புற்றுநோய்
விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் உள்ளது; மேலும் அது
அடிவயிற்றில் உள்ள 5 நிணநீர் முடிச்சுகள் வரை பரயிருக்கிறது; அதில் குறைந்தது ஒரு நிணநீர் முடிச்சாவது 2 செண்டிமீட்டர்களை விடப் பெரிதாக உள்ளது, ஆனால் எதுவுமே 5 செண்டிமீட்டர்களை விடப் பெரிதாக இல்லை; அல்லது
5 நிணநீர் முடிச்சுகளுக்கும் அதிகமாகப் பரவியிருக்கிறது; அந்த நிணநீர் முடிச்சுகள் 5 செண்டிமீட்டர்களை விட பெரிதாக இல்லை
அனைத்து புற்றுக்கட்டி குறிகாட்டி அளவுகளுமே இயல்பாக உள்ளன அல்லது இயல்பை விட விட சற்று மேலே உள்ளன
நிலை 2சி-யில் புற்றுநோய்:
நிலை 2சி-யில் புற்றுநோய்:விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் உள்ளது; மேலும்
அடிவயிற்றில் உள்ள 5 நிணநீர் முடிச்சுகளுக்குப் பரவியிருக்கிறது, அது 5 செண்டிமீட்டர்களை விட பெரிதாக இருக்கிறது
அனைத்து புற்றுக்கட்டி குறிகாட்டி அளவுகளுமே இயல்பாக உள்ளன அல்லது இயல்பை விட விட சற்று மேலே உள்ளன
நிலை III
நிலை 3 என்பது, நிலை 3எ, நிலை 3பி மற்றும் நிலை 3சி என்பதாகப் பிரிக்கப்பட்டு, ஒரு ரேடிக்கல் இங்வினல் ஆர்கியெக்டமி செய்த பிறகு தீர்மானிக்கப்படுகிறது.

நிலை 3எ-யில் புற்றுநோய்:
விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் உள்ளது; மேலும்
அடிவயிற்றில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிணநீர் முடிச்சுகளுக்குப் பரவ்யிருக்கலாம்; மேலும்
தொலைவில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு அல்லது நுரையீரல்களுக்குப் பரயிருக்கிறது
புற்றுக்கட்டிக் குறிகாட்டி அளவுகள், இயல்பான அளவிலிருந்து இயல்பை விட சற்று மேலான அளவு வரை இருக்கலாம்
நிலை 3பி-யில் புற்றுநோய்:
விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் உள்ளது; மேலும்

அடிவயிற்றில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிணநீர் முடிச்சுகளுக்கு, தொலைவில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு, அல்லது நுரையீரல்களுக்குப் பரவியிருக்கலாம்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புற்றுக்கட்டிக் குறிகாட்டிகளின் அளவு மிதமான அளவிற்கு இயல்பிற்கு மேலே இருக்கிறது
நிலை 3சி-யில் புற்றுநோய்:
விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் உள்ளது; மேலும்
அடிவயிற்றில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிணநீர் முடிச்சுகளுக்கு, தொலைவில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு, அல்லது நுரையீரல்களுக்குப் பரவியிருக்கலாம்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புற்றுக்கட்டிக் குறிகாட்டிகளின் அளவு மிதமான உயர்வாக இருக்கிறது
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com