விரைப் புற்றுநோயிற்கான
சிகிச்சை வாய்ப்புகள்
சிகிச்சை வாய்ப்புகள்
விரைப் புற்றுநோயுள்ள நோயாளிகளுக்கு வெவ்வேறு வகையான சிகிச்சைகள் கிடைக்கின்றன

அறுவைச் சிகிச்சை
கதிரியக்கச் சிகிச்சைமுறை
வேதிச் சிகிச்சைமுறை 
கவனித்துக் கொண்டே காத்திருப்பது
மூல உயிரணு மாற்று அறுவைச் சிகிச்சை உடன் உயர்-மருந்தளவு வேதிச்சிகிச்சைமுறை
அறுவைச் சிகிச்சை
விரையையும் (ரேடிக்கல் இங்வினல் ஆர்கியெக்டமி) மற்றும் நிணநீர் முடிச்சுகளி‎ல் கொஞ்சத்தையும் அகற்றியெடுப்பதற்கான அறுவைச் சிகிச்சை நோயறிகையில் அல்லது நிலையறிகையில் செய்யப்படலாம்

உடலின் மற்ற இடங்களுக்குப் பரவியிருக்கிற புற்றுக்கட்டிகளை (டியூமர்ஸ்), அறுவைச் சிகிச்சை மூலம் பாதியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ அகற்றியெடுக்கப்படலாம்

அறுவைச் சிகிச்சை
அறுவைச் சிகிச்சை செய்யும் நேரத்தில் காணப்படுகிற புற்றுக்கட்டி முழுவதையுமே மருத்துவர்கள் அகற்றியெடுக்கிற போதிலும், மீதமுள்ள புற்றுநோய் அணுக்கள் எதையும் கொல்வதற்காக, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சில நோயாளிகளுக்கு வேதிச்சிகிச்சைமுறையோ அல்லது கதிரியக்கச் சிகிச்சைமுறையோ கொடுக்கப்படலாம்.

புற்றுநோய் திரும்ப வந்துவிடும் என்ற ஆபத்தைக் குறைப்பதற்காக, அறுவைச் சிகிச்சைக்குப் பின் கொடுக்கப்படுகிற சிகிச்சை தான் துணை மருந்துச் சிகிச்சைமுறை என்று அழைக்கப்படுகிறது
கதிரியக்கச் சிகிச்சைமுறை
கதிரியக்க சிகிச்சை முறை என்பது, புற்றுநோய் அணுக்களைக் கொல்வதற்காக அல்லது அவற்றை வளரவிடாமல் செய்வதற்காக அதிக-ஆற்றல் வாய்ந்த ஊடுகதிர்களையோ அல்லது மற்ற வகையான கதிரியக்கத்தையோ உபயோகிக்கிறது

வெளிப்புற கதிரியக்கச் சிகிச்சைமுறை என்பது, புற்றுநோயை நோக்கி கதிர்வீச்சை அனுப்புவதற்காக, உடலுக்கு வெளியே உள்ளதோர் எந்திரத்தை உபயோகித்துக் கொள்கிறது

உள்ளான கதிரியக்கச் சிகிச்சைமுறை என்பது, நேரடியாகவே புற்றுக்கட்டிக்குள் அல்லது அதற்கு அருகில் வைக்கப்படுகிற ஊசிகள், விதைகள், கம்பிகள் அல்லது கத்தீட்டர்களில் வைத்து அடைக்கப்பட்ட கதிரியக்க வேதிப்பொருளை உபயோகித்துக் கொள்கிறது

கதிரியக்கச் சிகிச்சைமுறை எவ்விதமாகக் கொடுக்கப்படுகிறது என்பது சிகிச்சையளிக்கப்படுகிற புற்றுநோயின் வகை மற்றும் நிலையைப் பொருத்தே இருக்கிறது
வேதிச் சிகிச்சைமுறை
வேதிச்சிகிச்சைமுறை என்பது, புற்றுநோய் அணுக்களைக் கொல்வதன் மூலமாகவோ அல்லது அவ்வணுக்கள் பிரிவடைவதைத் தடுப்பதன் மூலமாகவோ, அப்புற்றுநோய் அணுக்கள் வளர்ச்சியடைவதிலிருந்து தடுப்பதற்கு மருந்துகளை உபயோகித்துக் கொள்கிறதோர் புற்றுநோய் சிகிச்சையாகும்.

வேதிச்சிகிச்சைமுறையை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் போது அல்லது ஒரு சிரை அல்லது தசைக்குள் ஊசி மூலமாகச் செலுத்தும் போது, அம்மருந்து இரத்தவோட்டத்திற்குள் நுழைந்து, உடலெங்கும் உள்ள புற்றுநோய் அணுக்களை அடைந்துவிட முடியும் (உடல்முழுமைக்குமான வேதிச்சிகிச்சைமுறை)
வேதிச் சிகிச்சைமுறை
வேதிச்சிகிச்சைமுறையை நேரடியாக மூளைத்தண்டுவட திரவம், ஒரு உடலுறுப்பு, அல்லது அடிவயிறு போன்றதோர் உடற் குழிவு ஆகியவற்றிற்குள் வைக்கும் போது அம்மருந்துகள், அப்பகுதிகளில் உள்ள புற்றுநோய் அணுக்களையே முக்கியமாகப் பாதிக்கின்றன (பிராந்திய வேதிச்சிகிச்சைமுறை)

வேதிச் சிகிச்சைமுறை எவ்விதமாகக் கொடுக்கப்படுகிறது என்பது சிகிச்சையளிக்கப்படுகிற புற்றுநோயின் வகை மற்றும் நிலையைப் பொருத்தே இருக்கிறது
கவனித்துக் கொண்டே காத்திருப்பது
கவனமாகக் காத்திருப்பது என்பது, அறிகுறிகள் தோன்றும் வரை அல்லது மாறும் வரை, சிகிச்சை எதையும் கொடுக்காமலேயே நோயாளியின் நிலைமையை கவனமாகக் கண்காணிப்பதாகும்

இது கண்காணிப்பு என்றும் அழைக்கப்படுகிறது
மூல உயிரணு மாற்று அறுவைச் சிகிச்சை உடன் உயர்-மருந்தளவு
வேதிச்சிகிச்சைமுறை
மூல உயிரணு மாற்று சிகிச்சையோடு கொடுக்கப்படுகிற உயர்-மருந்தளவு வேதிச்சிகிச்சைமுறை என்பது, உயர் மருந்தளவுகளில் வேதிச்சிகிச்சைமுறையைக் கொடுத்து, புற்றுநோய் சிகிச்சையால் அழிக்கப்பட்ட இரத்தம்-உருவாக்கும் அணுக்களை புதிய அணுக்களைக் கொண்டு மாற்றும் ஓர் முறையாகும்.
மூல உயிரணுக்கள் (முதிராத இரத்த அணுக்கள்), நோயாளி அல்லது தானம் செய்பவர் ஒருவரது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையிலிருந்து அகற்றியெடுக்கப்பட்டு, உறைய வைத்து இருப்பு வைக்கப்படுகின்றன
வேதிச்சிகிச்சைமுறை கொடுத்து முடிக்கப்பட்ட பிறகு, இருப்பு வைக்கப்பட்ட மூல உயிரணுக்கள் மீ‎ண்டும் இயல்பு வெப்பநிலைக்குக் கொண்டு வரப்பட்டு, ஒரு உட்செலுத்தல் மூலமாக திரும்பவும் நோயாளிக்கே கொடுக்கப்படுகிறது
உட்செலுத்திய‏ இத்தைய மூல உயிரணுக்கள் உடலின் இரத்த அணுக்களாக வளர்ச்சியடைகின்றன (மேலும் மீ‎ண்டும் உடலின் இரத்த அணுக்களாகத் திரும்புகின்றன
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com