விரைப் புற்றுநோயை
வரவிடாமல் தவிர்த்தல்
விரைப் புற்றுநோயை வராமல்
தவிர்த்து விட முடியுமா? 
விரைப் புற்றுநோயுள்ள அநேக ஆண்களுக்கு எவ்வித தெரிந்த ஆபத்துக் காரணிகளும் இருப்பதில்லை

மேலும் கீழிறங்காத விரைகள் மற்றும் அந்நோயின் குடும்ப வரலாறு போன்ற தெரிந்த ஆபத்துக் காரணிகளில் சில, தவிர்க்க முடியாதவையாகும்

இக்காரணங்களின் காரணமாக, இந்நோயின் பெரும்பாலான நிலைகளை இப்போது தவிர்ப்பது சாத்தியமற்றதாகும்
ஆண் குழந்தைகளில் கிரிப்டார்கிடிசம் (விரை கீழிறங்காத) நிலையை சரிசெய்து கொள்வது புத்திசாலித்தனமானதாகும், ஆனால் ஆனால் விரைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு அக்குழந்தைக்குள்ள ஆபத்தை இது மாற்றிவிடுகிறது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளவில்லை

ஆயுளின் ஆரம்பத்திலேயே கிரிப்டார்கிடிசம் நிலையை சரி செய்வது என்பது, கருவுறச் செய்யும் திறன் மற்றும் உடல் தோற்றம் போன்ற காரணங்களுக்காக பருவம் அடையும் வரைக் காத்திருப்பதை விட சிறந்தது என்பதாகத் தோன்றவில்லை

மேற்கொண்டும், கிரிப்டார்கிடிசம் போன்றதோர் ஆபத்துக் காரணி தனக்குள்ளதாகத் தெரிந்திருக்கிற ஒருவர், மிகுந்த கவனத்தோடு இருக்குமாறும், ஆரம்பகாலத்திலேயே நோயைக் கண்டறிந்து விட வழி செய்கிற வகையில், சுய விரை ஆய்வை கைக்கொள்ளுமாறும் ஊக்குவிக்கப்படலாம்
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com